Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

-

தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும், மாநில திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

test upload

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும்,  இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிடமும் உரிய அழுத்தத்தை அளிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

MUST READ