
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்று திரும்பும் போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது காலணி வீசியவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்ற போது, அவருக்கு ஆதரவாகவும் முழக்கம் எழுப்பினர். எனினும் வாகனத்தில் சென்ற அவர், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதைச் செலுத்திவிட்டு திரும்பினார். அப்போது சாலையோரத்தில் நின்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கம் எழுப்பிய நிலையில், கூட்டத்தில் இருந்து ஒருவர் காலணியையும், மற்றொருவர் கற்களையும் வீசியதாகக் கூறப்படுகிறது.
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மேலும், சிலர் வாகனத்தை வழிமறிக்க முயன்றதால், அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, முருகவேல், ராஜீவ் காந்தி ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பின்னர் விடுவித்தனர்.