spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதவறான தகவலை பரப்புகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தவறான தகவலை பரப்புகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

EPS - ஈபிஎஸ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவலை மக்களிடம் பரப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது நாளாக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர். நேற்று பேரவை கூட்டத்தை புறக்கணித்த அதுமுகவினர் இன்று பங்கேற்றனர். இரண்டாவது நாளாக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு எந்த பிரச்சனையை எழுப்பினாலும் அனுமதி தருகிறோம் என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனால் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். விஷச் சாராய விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கேள்வி நேரம் முடிந்து, நேரமில்லா நேரத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கிறேன் என சபாநாயகர் கூறியும் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவலை மக்களிடம் பரப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மக்கள் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவலை மக்களிடம் பரப்புகிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது என குற்றம் சாட்டிய அவர், விஷச்சாராயம் அருந்தியவர்கள் தாமதமாக வந்ததால் தான் உயிரிழந்ததாக கூறுவது தவறு எனவும் கூறினார்.

MUST READ