Homeசெய்திகள்தமிழ்நாடுஇறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சத்யபிரதா சாகு

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சத்யபிரதா சாகு

-

- Advertisement -

திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.

we-r-hiring

அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்கள், 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. மேலும் 8,027 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள், வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் 3,310 பேர் உள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்களும், துறைமுகம் தொகுதியில் குறைந்த அளவிலான வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதி துறைமுகம். அங்கு 1.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, “ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை அடுத்து 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படும், ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்பதை முறைப்படி தேர்தல் ஆணையம் அறிவித்த பின் தேர்தல் நடத்தப்படும். இனியும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தவும் வாய்ப்பு உள்ளது. 3.82 கோடி வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்” என தெரிவித்தார்.

MUST READ