எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக் கோரிய ஆர்.எஸ்.பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கோரியதில் ரூபாய் 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் கூறியும், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரியும் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூலை 18) காலை 11.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மதுரையில் மாஸ் காட்ட தயாராகி வரும் அதிமுக …. தொண்டர்கள் விறு விறுப்பு
அப்போது, “ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை. கடந்த 2018- ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறைத் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் குறைக் காண முடியாது” என்று குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.