Homeசெய்திகள்தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்!

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்!

-

 

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்!
Photo: TN Govt

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

“கப்பலோட்டிய தமிழரை நன்றிப் பெருக்குடன் நினைவுக் கூர்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் தொடர்பாக, சட்டப்பேரவையில் மீண்டும் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சரை வேந்தராக்கும் மசோதா அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட போது தி.மு.க. எதிர்த்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஏன் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்? ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே சிறப்புக் கூட்டம் கூட்டுவது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனால் சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெற்றன.

“நாளை நீங்களும் ஆளுநராகலாம்”- சபாநாயகரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை!

பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவருக்கு எந்த அச்சமும் வேண்டாம்; அரசு ஆலோசனையை ஏற்காமல் ஆளுநர் முடிவெடுப்பதால், துணைவேந்தர் மசோதா கொண்டு வரப்பட்டது. நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு ஆவணச் செய்யும்.

மீதமுள்ள மசோதாக்களுக்கும் ஆளுநர் விரைந்து ஒப்புதல் தர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஆலோசனையை ஏற்காமல் ஆளுநர் முடிவெடுப்பதில், துணைவேந்தர் மசோதா கொண்டு வரப்பட்டது. அவை முனைவர் சாதுரியமாகப் பேசவில்லை; உண்மையைத் தான் பேசுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் கொடுக்க மறுப்பது ஆளுநரின் கடைந்தெடுத்த சர்வாதிகாரம். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசின் ஆலோசனையை ஆளுநர் ஏற்க மறுக்கிறார். துணைவேந்தர் நியமனத்தில் சிண்டிகேட் கூறினாலும், ஆளுநர் ஏற்றுக் கொள்வதில்லை. வழக்கு விசாரணைக்கு வரும் போது, நம் மசோதாக்கள் மீது ஆளுநர் கையெழுத்திட்டே ஆக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!

பின்னர் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “வழக்கு சாதமாக அமைய வேண்டும் என்பதால் தான் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.

MUST READ