Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தல்- 27.89% வாக்குப்பதிவு

ஈரோடு இடைத்தேர்தல்- 27.89% வாக்குப்பதிவு

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை முதலே வாக்குப்பதிவு என்பது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

we-r-hiring

1206 தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்துவித அடிப்படை வசதிகளும் அதே போல் 2400க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிபி அக்ரஹாரம் பகுதியில் மதரசா மகளிர் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி இசைப்பள்ளி, அன்னை சத்யா நகரில் உள்ள தனியார் பள்ளி என அப்பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் காலை முதலே சாரை சாரையாக படையெடுத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

Image

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி, 27.89 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மொத்தம் 63 ஆயிரத்து 469 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள் 32, 562 பேரும், பெண் வாக்காளர்கள் 30,907 பேரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

MUST READ