Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு கிழக்கில் 80% பேர் கை சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கில் 80% பேர் கை சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் இடைத்தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

Image

we-r-hiring

வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் என்னுடைய வாக்கை மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கு செலுத்தி இருக்கிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். 100க்கு 100% அவர்களால் ஜெயிக்க முடியாது என்பதால் விமர்சனம் செய்கிறார்கள். வெற்றி பெற முடியாது என்பதால் மை அழிவதாக எதிர்க்கட்சியினர் பொய் குற்றஞ்சாட்டுகின்றனர். எனது விரலில் வைத்த மை அழியவில்லையே.

மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.ஈரோடு கிழக்கில் 80 சதவீதம் பேர் கை சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள் . முதல்வர் ஸ்டாலினின் 20 மாத ஆட்சியின் அடையாளமாக இந்த தேர்தல் வெற்றி அமையும். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ” என்றார்.

MUST READ