spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

-

- Advertisement -

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

கிருஷணகிரி மாவட்டம் ஓசூரில்  ரூ.3,051 கோடி முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் ரூ.3,699 கோடி முதலீட்டில் இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆலை செயல்பட்டு வரும் நிலையில், இதனை 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

we-r-hiring

tamilnadu assembly

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் தற்போது தினசரி 92 ஆயிரம் மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை தினசரி 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஓசூர் ஆலையில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா எலக்ட்ரானிக்ஸ் விண்ணப்பம் செய்துள்ளது. இந்த தொழிற்சாலையில் தான் ‘ஆப்பிள் ஐபோன்’ உற்பத்தி செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ