spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉங்களுடன் ஸ்டாலின் திட்டம்… உச்சநீதிமன்ற கொடுத்த பதிலடி…

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… உச்சநீதிமன்ற கொடுத்த பதிலடி…

-

- Advertisement -

உங்களுடன் ஸ்டாலின்  நலத்திட்டம் வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் சென்றவர்களை சொந்த பணத்திலிருந்து 10 லட்சம் ரூபாயை அரசுத் திட்டத்துக்கு  அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு சரியான பதிலடி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.உங்களுடன் ஸ்டாலின்  திட்டம்… உச்சநீதிமன்ற கொடுத்த பதிலடி…மறைந்த முதலமைச்சர் கலைஞரின் நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு  மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாலை மரியாதை செய்தார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெறுவோருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் என, சுமார் 1000 பேருக்கு போர்வையை வழங்கினார்.நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

கலைஞர் பல்வேறு பரிமாணங்களை கொண்டவர் என புகழ்ந்துரைத்தார். உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றோருக்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி கொடுத்துள்ளது என்றார். குறிப்பாக எம்ஜிஆர் ஆட்சி காலத்திலிருந்து முதலமைச்சரின் பெயர்களை திட்டங்களுக்கு வைப்பது வழக்கமான ஒன்று தான் என்றும் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் என்று பெயர் வைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரைக் கொண்டு பெயர்கள் வைத்ததை திமுகவினர் யாரும் கேள்வி கேட்கவில்லை என்று அமைச்சர் பதிலளித்தாா்.

we-r-hiring

ஆனால் இன்று நலம் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் ஆகிய திட்டங்கள் தொடர்ந்து பல லட்சம் பேருக்கு நன்மை அளித்து வரும் நிலையில், இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிமுக உயர்நீதிமன்றம் சென்றதற்கு சரியான பதிலடியை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பது சரியான பதிலடி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கிட்னி விவகாரத்தில் அறிக்கை தொடர்பான கேள்விக்கு, கிட்னி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை அவர் பதிலாக தெரிவித்தார். கிட்னி விவகாரம் விசாரணை முடிந்துவிட்டதாக கூறிய அமைச்சர் மா.சு. நாளைக்குள் சுகாதார துறையின் செயலாளரிடம் ஆய்வறிக்கை கொடுக்கப்பட்டு, பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சு. விளக்கினார். இந்நிகழ்ச்சியையடுத்து சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அறுசுவை உணவுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆயிரம் பேருக்கு வழங்கினார்.

தமிழகத்திற்கு தனித்துவ மாநிலக் கல்வி கொள்கை…நாளை முதல்வர் வெளியீடு…

MUST READ