அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், தான் ஓய்வுபெற இருந்த நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் வேல்ராஜ். அவரது துணைவேந்தர் பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. எனினும் அவர் ஓய்வுபெறும் வயது நிறைவடையாத நிலையில் அவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இன்று பணியில் இருந்து ஓய்வுபெற கடைசி நாள் என்று இருந்த நிலையில் வேல்ராஜ் மீது நிலுவையில் இருந்த பழைய வழக்குகளை காரணம் காட்டி சிண்டிகேட் கூட்டத்தில் அவரை சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் இருந்தது. அந்தப் புகாரில் அப்போதைய துணைவேந்தராக இருந்த வேல்ராஜ்க்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், வழக்கு விசாரணை காரணமாக அவர் ஓய்வுபெற இருந்த கடைசி நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இது அண்ணா பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.