Homeசெய்திகள்தமிழ்நாடுபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2024 இன்று தாக்கலாகிறது!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2024 இன்று தாக்கலாகிறது!

-

- Advertisement -

 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
Photo: TN Govt

பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2024, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்.19) தாக்கலாகிறது.

அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து வில்லனாகவும் களமிறங்கும் விஜய்…..’GOAT’ அப்டேட்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.

பின்னர், 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்று தாக்கலாகும் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 69 படத்தின் அறிவிப்பு எப்போது?

பட்ஜெட்டில் இடம் பெறவுள்ள சிறப்பம்சங்களையும், முத்திரை சின்னத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நாளை (பிப்.20) வேளாண்மைத்துறைக்கென்று தனிப்பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவிருக்கிறார்.

MUST READ