இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ.8,100 கோடி மதிப்பிலான ஐபோன்களை டிசம்பரில் ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகியவை ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து வழங்கிவருகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து சாதனை அளவாக ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் செல்போன்களை ஆப்பிள் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் ஒரே மாதத்தில் ரூ.8,100 கோடி செல்போன்கள் ஏற்றுமதி செய்யும் முதல் நிறுவனம் என்ற சாதனையை ஆப்பிள் நிறுவனம் படைத்துள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தன் செல்போன்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதுவரை செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்து வந்த சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் நவம்பரில் பின்னுக்கு தள்ளியுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 பில்லியன் டாலர் (ரூ.8,100 கோடி) என்ற இலக்கை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஏற்றுமதி கடந்துள்ளது. ஆப்பிள் ஏற்றுமதி செய்த செல்போன்களில் ஐபோன் 12,13,14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகிய மாடல்கள் அடங்கும்.
