Homeசெய்திகள்தமிழ்நாடு"தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 11,000 உயர்த்தப்படும்"- சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 11,000 உயர்த்தப்படும்”- சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 11,000 உயர்த்தப்படும்"- சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Photo: TN Govt

சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதைத் தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளுக்கு தி.மு.க. அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 10,000- லிருந்து ரூபாய் 11,000 ஆக உயர்த்தப்படும். தியாகிகளின் ஓய்வூதியம் கடந்தாண்டு உயர்த்தப்பட்ட நிலையில், குடும்ப ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 55,000 காலிப் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். மாநிலங்களுக்கு மாநிலம் உணவு, பண்பாடு மொழியில் மாறுபாடு உள்ளது. வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம். மூவர்ணக் கொடியைப் போற்றுவதன் மூலம் நாட்டையும், நாட்டு மக்களையும் போற்றுகிறோம்.

செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!

மகாத்மா காந்தி, பகத் சிங், நேதாஜி, அம்பேத்கர் என எல்லா தலைவர்களும் நல்லிணக்க இந்தியாவை தான் விரும்பினர். சமூக நீதி, சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது தான் தி.மு.க. அரசு. அனைவருக்குமான அரசாக, அனைவரின் வளர்ச்சிக்குமான அரசாக செயல்பட்டு வருகிறோம். புதுமை பெண், கட்டணமில்லாப் பேருந்து சேவை என பெண்களுக்கானத் திட்டங்களை வகுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ