spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபேக்கரியில் தீவிபத்து- ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

பேக்கரியில் தீவிபத்து- ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

-

- Advertisement -

பேக்கரியில் தீவிபத்து- ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

காரைக்குடியில் தனியார் பேக்கரியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் உணவு திண்பண்டங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

In Karaikudi, a bakery was gutted by fire. | காரைக்குடியில், பேக்கரிகடை  தீயில் எரிந்து நாசம். | Dinamalar

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் கல்லல் பகுதியைச் சேர்ந்த சகுந்தலாதேவி. இவரது பேக்கரி கடையில் இன்று அதிகாலை, டீ மாஸ்டர் நாகராஜ் கடையை திறந்து டீ போட முயன்ற போது எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டாதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென கடை முழுவதும் பரவி எரிய தொடங்கியது.

we-r-hiring

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புவீரர்கள் தீயை போராடி அனைத்தனர். தீ விபத்தால் பேக்கரி கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மற்றும் உணவு தின்பண்டங்கள் தீயில் எரிந்து சேதமானது. அருகில் இருந்த மின்வாரிய ஊழியர் உடனடியாக அப்பகுதியில் மின் தடையை ஏற்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து சம்வம் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து டீ மாஸ்ட்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ