அதிமுக தோல்விக்கான காரணங்கள் மற்றும் நிர்பாகிகளின செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டரிந்து வருகிறாா்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வி தொடர்பாக, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்த எடப்பாடி கே. பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள், நிர்வாகிகளின் செயல்பாடுகள், வாக்கு வங்கி சரிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.
கிராமப்புறங்களில் வலுவான கட்சி கட்டமைப்பைக் கொண்டிருந்தபோதிலும், பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படுகிறது. மேலும், கட்சியின் அமைப்பு ரீதியான பலவீனங்கள், உட்கட்சி முரண்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைத் தொடர்ந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளுடனும் கட்டம் கட்டமாக ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை முழுமையாக ஆய்வு செய்து, கட்சியின் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த ஆலோசனைகளின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!
