Homeசெய்திகள்தமிழ்நாடுராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அந்தத் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். இந்நிலையில், அவர்களின் செயல்பாடுகள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உட்பட்டவை என அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த நிலையில், தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய 4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தெரிவித்துள்ளார்.

மேலும், சபாநாயகரின் இந்த முடிவு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்வதாகவும், இதன் மூலம் சட்டத்தின் செயல்திறன் பாதிக்கப்படுவதாகவும் அதிமுக வாதிட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, இடைத்தேர்தல் நடைபெறுமா அல்லது தற்காலிகமாக நிறுத்தப்படுமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கனிமொழி எம்.பி. ஆவேசம்

MUST READ