Homeசெய்திகள்தமிழ்நாடு4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் - 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு

4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு

-

- Advertisement -

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நான்கு பேருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் - 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு

2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்தன. இதன் காரணமாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது.

we-r-hiring

பின்னர் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு அணிகளும் சமரசம் செய்து கொண்டதுடன், வேலுமணி தரப்பினரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியின் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியின் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதியின் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.

இதையடுத்து, இந்த நான்கு தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் ஐந்து தொகுதிகள் காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்த இந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள புகார் தொடர்பாகவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கோரியும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 7 நாட்களுக்குள் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

”நயினார் நாகேந்திரனுக்கு  ‘ரெட் சிக்னல்’…தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

MUST READ