Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவ குணம் வாய்ந்த மீனின் நெற்றி மட்டும் 2லட்சத்திற்கு விற்பனை:

மருத்துவ குணம் வாய்ந்த மீனின் நெற்றி மட்டும் 2லட்சத்திற்கு விற்பனை:

-

மனிதர்களின் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மீனின் நெற்றி 2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பும் பொழுது ஒரு மீனவர் வலையில் அபூர்வ கூரல் மீன் சிக்கியது .இந்த மீன் 24 கிலோ இருந்தது. இந்த கூரல் மீனின் நெற்றி பகுதி மருத்துவ குணம் கொண்டது .இந்த மீனின் நெற்றி பகுதியில் இருந்து எடுக்கப்படும் நூல்(நரம்பு) மனிதர்களின் அறுவை சிகிச்சையில் தையல் போடுவதற்கு பயன்படுத்தபடுகிறது.

மீனின் நெற்றி மட்டும் 2லட்சத்திற்கு விற்பனை இந்த மீனின் நெற்றி 2 லட்சத்திற்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கபடுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த கூரல் மீனில் ஆண், பெண் என வகை உள்ளது. பெண் மீனிற்கு நெற்றி இருக்காது.ஆண் மீனின் நெற்றி பகுதியை எடுத்த பிறகு, இந்த மீன் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன் ஒரு கிலோ ரூபாய் 1000-1500வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ