spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!

-

- Advertisement -

 

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!

we-r-hiring

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கவிதாவின் ஜாமீன் மனு மீது ஏப்.8- ல் தீர்ப்பு!

திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் போர்ஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கூட்டணி கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 04) இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டதாகவும் சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

“ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இதற்கிடையே, தேர்தல் பரப்புரைக்கு செல்லவிடாமல் அதிகாரிகள் தன்னை அச்சுறுத்தியதாக ஆவுடையப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ