Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் சிறப்பு டி.ஜி.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு- வழக்கின் பின்னணி!

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு- வழக்கின் பின்னணி!

-

 

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
File Photo

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பேனர், கட் அவுட் கூடாது- விஜய் உத்தரவு

வழக்கின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, அவரது ஆய்வுப் பணியில் பாதுகாப்புக்கு சென்ற தமிழக காவல்துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இது தொடர்பாக, கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில், புகார் தெரிவித்தவருக்கு மிரட்டல் விடுத்ததாக செங்கல்பட்டு காவல்துறை எஸ்.பி. கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் புகார் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், விழுப்புரம் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு நடைபெற்று வந்தது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை

127 சாட்சிகளிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை, 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ்-யைக் குற்றவாளி என தீர்ப்பளித்த விழுப்புரம் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மன்ற நீதிபதி புஷ்பராணி, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ரூபாய் 10,500 அபராதத்தை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல், அவருக்கு உடந்தையாக, முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.

தீர்ப்புக்குப் பிறகு ஜாமீன் கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

MUST READ