Homeசெய்திகள்தமிழ்நாடுஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் - வள்ளலார் பேட்டி

ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் – வள்ளலார் பேட்டி

-

- Advertisement -

ஜம்மு காஷ்மீர் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக சென்னை திரும்பினார்கள். ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் அன்பானவர்கள் என்று ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் - வள்ளலார் பேட்டிடெல்லியில் இருந்து அதிகாலை 25 பேரும் தற்பொழுது 48 பேரும் சென்னை திரும்பி உள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வாகனங்கள் மூலம் சென்னை திரும்பியவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார் பேட்டி அளித்துள்ளாா்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவிற்கு சென்று இருந்த தமிழக சுற்றுலாப் பயணிகளை உடனடியாக தமிழகம் அழைத்து வர தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக டெல்லியில் இருந்து மதுரை, கும்பகோணம், ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற 25 பயணிகள் விமான மூலமாக இன்று அதிகாலை சென்னை திரும்பினார்கள். இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக டெல்லியில் இருந்து ஹைதராபாத் வழியாக 48 பேர் சென்னை திரும்பினார்கள். அவர்களை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார் வரவேற்றார்.

மேலும் சென்னை திரும்பி அவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த, சிறப்பு வாகனங்கள் மூலம் மதுரை திருச்சி தர்மபுரி வேலூர் உள்ளிட்ட அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார்,

“தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாக காஷ்மீர் சென்றவர்களை தொடர்பு கொண்டதாகவும், இன்று அதிகாலை 25 பேர் சென்னை வந்தனர் அவர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தற்பொழுது 48 பேர் சென்னை திரும்பி உள்ளதாகவும் இவர்கள் மதுரை திருச்சி வேலூர் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், இவர்களுக்காக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வாகனங்கள் மூலம் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் அவர்கள் அன்பானவர்கள் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் எங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

 

MUST READ