spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுரசொலி செல்வம் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார் - முதல்வர்

முரசொலி செல்வம் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார் – முதல்வர்

-

- Advertisement -

35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.முரசொலி செல்வம் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார் - முதல்வர்முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அவா்கள் முரசொலி செல்வம் பிறந்த நாளான இன்று அவரது திருவுருவச் சிலையை மாலையில் திறந்து வைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பில், “திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து மறையும் வரை கழகத்தில் பயணித்து, எனக்கு ஒரு மூத்த சகோதரனாக இருந்து, வழிநடத்திய மதிப்பிற்குரிய ‘முரசொலி செல்வம்’ அவர்களின் பிறந்தநாளான இன்று மாலை, 35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.

அதனை தொடா்ந்து, அவரது ‘சிலந்தி கட்டுரைகள்’நூல் வெளியிடப்படுகிறது. சீரிய அவரது கருத்துகளைத் துணைக்கொண்டு களமாடுவோம்! வெல்வோம்!” என்று தெரிவித்திருந்தாா்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு – அன்புமணி ராமதாஸ்

we-r-hiring

MUST READ