ஐ.ஏ.எஸ்,ஐ.,எஃப்.எஸ் , ஜ.பி.எஸ், பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சாதனை.
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு ஜீன் 16ம் தேதி நடைபெற்றது. அதன் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 1,009 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி ( UPSC ) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் ஐ.ஏ.எஸ், ஜ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட 1,132 காலிப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை, மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் www.upsc.gov.in இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் ஷக்தி துவேவும், தமிழக அளவில் சிவச்சந்திரனும் முதலிடம் பிடித்துள்ளனர். யுபிஎஸ்சி தேர்வில் நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சிவச்சந்திரன் தமிழக அளவில் முதலிடமும் தேசிய அளவில் 23- வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளாா். மேலும் மோனிகா என்ற மாணவி தேசிய அளவில் 39 வது இடத்தையும். தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் காமராஜ், சங்கரபாண்டியன் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.