தூத்துக்குடியில் ஜூன் மாதம் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்படும் என இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளாா்.தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தற்போது ஜூன் மாதம் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்படும் என தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார். மேலும் கார் தொழிற்சாலை அமைக்க முதல்கட்டமாக வின்பாஸ்ட் நிறுவனம் 114 ஏக்கரில் ரூ.4276 கோடி முதலீடு செய்துள்ளது. வின்பாஸ்ட் ஆலை முழுவீச்சில் செயல்படும் போது ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார கார்கள் உற்பத்தி செய்ய திட்டம் தீட்டி உள்ளதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளாா். மின்சார காருக்கு தேவையான பேட்டரி உட்பட அனைத்து உதிரி பாகங்களும் தூத்துக்குடியில் தயாரிக்கப்படும். துறைமுகம், விமான நிலையம் அருகே இருப்பதானால், இங்கு தயாரிக்கப்படும் கார்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியை தேர்ந்தெடுத்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு இணை முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். மற்றும் அமெரிக்காவின் டெஸ்லா கார் தொழிற்சாலைக்கு சர்வதேச சந்தையில் போட்டியாக திகழ்வது வின்பாஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்