Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரியில் தியாகிகளுக்கு இலவசமனை பட்டா- முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் தியாகிகளுக்கு இலவசமனை பட்டா- முதல்வர் ரங்கசாமி

-

- Advertisement -

புதுச்சேரியில் தியாகிகளுக்கு விரைவில் இலவசமனை பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

rangasamy

we-r-hiring

புதுச்சேரி அரசு சார்பில் குடியரசு தினத்தை ஒட்டி விடுதலை போராட்ட தியாகிகள் கௌரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மை விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தியாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரியில் தியாகிகளுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. ஒன்றே ஒன்றுதான் பாக்கியுள்ளது. அது வீட்டுமனை பட்டா. அதற்கும் இடம் தயாராகிவிட்டது. விரைவில் இலவசமனை பட்டா வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து தியாகிகளை வாழ்த்தி பேசிய குடிமை பொருள் வழங்க துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், மகாத்மா காந்தியை குறிப்பிட்டு do or die என்ற வார்த்தையை மேற்கோள் காட்டி பேசியும், பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு ஏக் மார்..தோ…துக்கடா.. என்று இந்தியில் தெரிவித்தால், தியாகிகள் மத்தியில் அவர் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை என்று குழம்பினர்.

MUST READ