Homeசெய்திகள்தமிழ்நாடுஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

MKStalin

ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 09- ஆம் தேதி டெல்லிக்கு செல்லவுள்ளார்.

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலி

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள், பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் செப்டம்பர் 09- ஆம் தேதி விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் கலந்து கொள்ளவுள்ள தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 09- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 10- ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!

அண்மையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில், தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

MUST READ