Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!

-

 

"பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
Photo: Minister Ponmudy

பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

ஆலங்குடி காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.36 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வழக்குப்பதிவுச் செய்தார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2002- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவுச் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை; போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவாக விசாரணைக்கு எடுத்து ஆகஸ்ட் மாதம் 10- ஆம் தேதி விசாரித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விரோதமானது என்பதால், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி என்பதாலும் தாமாக முன்வந்து வழக்கை எடுத்ததாக நீதிபதி விளக்கமளித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :

அதன் தொடர்ச்சியாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறைத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவித்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு எடுத்த வழக்கில் தெரிவித்த கருத்துகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக உள்ளது என்று வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேல்முறையீடு செய்ய அவகாசமுள்ளது; மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கா என ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலி

இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் பொன்முடி தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? அல்லது தானே விசாரிப்பதா? என முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 14- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ