spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலி

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலி

-

- Advertisement -

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலி

ஆண்டிப்பட்டி அருகே பேருந்தில் இருந்து கீழேவிழுந்த ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

Bus Accident

மதுரையில் இருந்து அரசுப்பேருந்து 30 பயணிகளுடன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை தேனிமாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவர் ஓட்டிவந்தார். ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் வந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய பேருந்தில் இருந்து டிரைவர் தங்கப்பாண்டியன் திடீரென கீழேவிழுந்தார்.

we-r-hiring

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தங்கப்பாண்டியன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரம் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட முள்வேலியில் மோதிநின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த யாரும் காயம் அடையவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

MUST READ