அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.


பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். அண்ணாமலைக்கு எதிராக தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறார்கள். நானும் உங்களுக்கு 4 புகைப்படங்களை தருகிறேன்- இரவில் நான் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறேன் மற்றும் தூங்குகிறேன் என்று வதந்திகளை பரப்புங்கள். அதை செய்ய உனக்கு தைரியம் இருக்கிறதா அண்ணாமலை? வதந்திகளை கண்டு நான் பயப்படுவேன் என்று நீங்கள் நினைத்தால், im very sorry நான் பயப்படவில்லை..
அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறார்கள். நானும் உங்களுக்கு 4 புகைப்படங்களை தருகிறேன்- இரவில் நான் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறேன் மற்றும் தூங்குகிறேன் என்று வதந்திகளை பரப்புங்கள். 1/4 pic.twitter.com/2G8XuqszcX
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) January 28, 2023
உனக்கு மட்டும் பெற்றோர் இருப்பது போல், வேறு யாருக்கும் பெற்றோர் இல்லாதது போல் நீங்கள் கல்லூரியில் பேசிய பேச்சுக்கு மகிழ்ச்சி. அதே போல், நீங்கள் என்னை பற்றி பரப்பும் வதந்திகளை என் தாயும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பெண்களின் தாயும் உங்களை சபிக்க விரும்பாவிட்டாலும், அறியாமல் வரும் சாபம் ஆபத்தானது என்று சிந்தியுங்கள். உங்கள் தவறுகளுக்காக நீங்கள் வருந்துவீர்கள். நீங்கள் கர்மாவை எதிர்கொள்வீர்கள். என்ன கர்மா.. ஆயிரம் பேருக்கு மேல கொனுட்டு 20 வருஷமா நல்லா தான் இருக்கான்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
