Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது - திமுக எம்.பி., கனிமொழி

கலைஞரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது – திமுக எம்.பி., கனிமொழி

-

கலைஞர் மு.கருணாநிதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதன் வாயிலாக அவரது படைப்புகள் அனைத்தும் அதிகளவிலான மக்களிடம் சென்று சேரும் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்ப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிப்பில்,
தனியொரு மனிதரால் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்தவர் கலைஞர்
என்றும், அவர் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும் படைத்துள்ளதகவும், இதேபோல் 15 சிறுகதைகள், 210 கவிதைகளையும் படைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைஞர் மு.கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்படுவதாகவும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞரின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கலைஞர் மு.கருணாநிதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக திமுக கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள பதிவில், கலைஞரின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அனுமதியளித்த தமது தாயார் ராசாத்தி கருணாநிதி அவர்களுக்கும், இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதனால் கலைஞரின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவிலான மக்களிடம் சென்று சேரும் என்பது மகிழ்ச்சி அளிப்பதகவும் கனிமொழி கூறியுள்ளார்.

MUST READ