- Advertisement -
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஞானசேகரன் மீதான நிரூபிக்கப்பட்ட பிஎன்எஸ் சட்ட பிரிவுகளின் விவரங்கள்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளி தான் என்றும் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. குற்றவாளி ஞானசேகரனுக்கு வரும் ஜூன் 2-ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
குற்றவாளி ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட பிஎன்எஸ் சட்ட பிரிவுகள் பின்வருமாறு:-
- 329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்து மீறி நடத்தல்.
- 126(2) – மாணவியை செல்லவிடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்.
- 87 – மாணவியை வலுக் கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல்.
- 127(2) – மாணவியை உடலில் காயத்தை ஏற்படுத்துதல்.
- 75(2) – மாணவியை விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்.
- 76 – மாணவியை கடுமையாக தாக்குதல்
- 44 – மாணவியின் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல்.
- 351(3) – மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தல்.
- 238(B) – தகவல் தொழில்நுட்ப சட்டம்: பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்.
- 66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்
- பிரிவு 4 – தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம்.
நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்!
