சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் ஒரு கிராம் ரூ.7,000-த்தை நெருங்கி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து, ரூ.6830-க்கும் ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து, ரூ.54,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து, ரூ.6920-க்கும் ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து, ரூ.55,360-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் தொடர் ஏற்றத்தில் உள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ. 0.20 உயர்ந்து ரூ.99.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?
இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.100.50 விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.99,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.