spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇல்லத்தரசிகளே தங்கம் வாங்க நல்ல நேரம் - தங்கம் விலை அதிரடியாக குறைவு

இல்லத்தரசிகளே தங்கம் வாங்க நல்ல நேரம் – தங்கம் விலை அதிரடியாக குறைவு

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. செவ்வாய் கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், இதேபோல் ஒரு சவரன் ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,725-க்கும், இதேபோல் ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,360-க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6725-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.92.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

MUST READ