Homeசெய்திகள்தமிழ்நாடு"அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி"- அமைச்சர் ரகுபதி பேட்டி!

“அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி”- அமைச்சர் ரகுபதி பேட்டி!

-

 

"அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி"- அமைச்சர் ரகுபதி பேட்டி!
Video Crop Image

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல உள்ளார். தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேறு யாரோ பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்கள். ஒரு எதிர்க்கட்சித் தலைவரைப் போல் ஊர், ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து வந்தார் ஆளுநர்.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என யாரோ திட்டமிட்டு செய்கிறார்கள். ஆளுநர் மாளிகைக்கு குழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என போகிற போக்கில் சொல்லக்கூடாது. யாரோ ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியதற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பாக முடியும்?

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா…?

ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டியது அரசின் கடமை. எங்கள் கடமையைத் தான் நாங்கள் செய்தோம்; ஆளுநரை விமர்சிக்கவில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெடவில்லை” எனத் தெரிவித்தார்.

MUST READ