spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆளுநருடன் பேசியது என்ன?"- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

“ஆளுநருடன் பேசியது என்ன?”- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

-

- Advertisement -

 

"ஆளுநருடன் பேசியது என்ன?"- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

we-r-hiring

ஆளுநருடனான சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆசிரியப் பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுக அரசுக்கு கண்டனம் – ஈபிஎஸ்

இன்று (மார்ச் 10) காலை 11.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது; இதேநிலை நீடித்தால் மக்கள் வாழ்க்கை சீரழியும். இளைஞர்கள், மாணவர்கள் பெருமளவு போதைப்பொருளால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மிகவும் சர்வ சாதாரணமாக போதைப்பொருள் கிடைக்கும் நிலை உள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்கவில்லை.

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான “வார் ரூம்” திறப்பு!

விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினேன். குட்கா வேறு, போதைப்பொருள் வேறு; குட்காவை இந்த அரசு தடுத்திருக்கிறதா? கடந்த 10 நாட்களில் எவ்வளவு போதைப்பொருள் பிடிக்கப்படுகிறது? இதுவரை காவல்துறை செயல்படவில்லையா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ