Homeசெய்திகள்தமிழ்நாடுமறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

-

- Advertisement -

தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

we-r-hiring

இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சி திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும். சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காணும் முயற்சியில் பல்கலைக்கழகங்கள் ஈடுபடவேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் குறைந்தது 5 ஆராய்ச்சி மாணவர்களை நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் காண வேண்டும். இத்திட்டத்தை முடிக்க ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கப்படலாம்.

பலரது தியாகங்கள், பங்களிப்புகள் பொதுவெளியில் அறியப்படாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளன. எனவே சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளைப் பற்றி ஆராய்ந்து ஆவணப்படுத்த வேண்டும்” என பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

MUST READ