

மூன்று நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
சிறுநீரக கற்களை கரைக்க இந்த ஒரு பழம் போதும்!
தி.மு.க.வைச் சேர்ந்த பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அவருக்கு மீண்டும் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர்கள் பதவி அளித்து சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நிலையில், மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 14) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் என்னென்ன பிரச்சனை உண்டாகும்?
டெல்லியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தும் ஆளுநர், மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 16- ஆம் தேதி அன்று டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுநர் சென்னை திரும்புகிறார்.


