spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியை திணிக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியை திணிக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

-

- Advertisement -

இந்தியை திணிக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழுக்கு நிகரானது சமஸ்கிருதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை ஆளுநர் மாளிகையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ் மொழியானது இந்தி மொழியைவிட மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமைவாய்ந்த மொழி. தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவை. அனைத்து கருத்துகளையும் வழங்கும் திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும். இந்தியாவின் ஆன்மீக, கலாச்சார தலைநகரம் தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு 3,500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, அதற்கும் முந்தைய வரலாறு உண்டு.

we-r-hiring

தமிழ் இல்லாமல் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழை ஆழமாக படித்து தமிழ் அறிஞர்களாக மாற வேண்டும்” என்றார்.

MUST READ