Homeசெய்திகள்தமிழ்நாடு“இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்”- கடும் அமளிக்கு மத்தியில் ஆளுநர் உரை

“இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்”- கடும் அமளிக்கு மத்தியில் ஆளுநர் உரை

-

- Advertisement -

ஆளுநர் உரையுடன் இந்தாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் உரையை தொடங்கினார். ஆனால் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அமலியில் ஈடுபட்டன. ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தன.

governor

we-r-hiring

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. வடகிழக்கு பருவ மழையையும் புயலையும் சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள். வடகிழக்கு பருவ மழையையும், புயலையும் சிறப்பாக கையாண்டதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் சுமார் 16 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள். நன்றி!. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவியுள்ளது. 4,457 நியாய விலைக்கடைகள் புதுப்பொலிவு பெறப்பட்டுள்ளன.தமிழக மீனவர்களை கைது செய்யும் போக்கை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. முதலமைச்சர் தலைமையின்கீழ் காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நதிநீர் பங்கீடு விவகாரங்களை தமிழக அரசு திறம்பட கையாண்டு வருகிறது” எனக் கூறினார்.

 

 

 

 

 

 

 

MUST READ