Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் தேநீர் விருந்து- காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

ஆளுநர் தேநீர் விருந்து- காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

-

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

குடியரசுத் தினத்தன்று மாலை 05.00 மணிக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள், அமைச்சர் பெருமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுநர்கள் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுக்கு தேநீர் விருந்தளிக்கவுள்ளார்.

அந்த வகையில், வரும் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க., கொங்கு மக்கள் தேசிய கட்சி, காங்கிரஸ், தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனர்.

சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை ரத்துச் செய்தது உயர்நீதிமன்றம்!

ஆளுநர் மாளிகை பா.ஜ.க.வின் அலுவலகமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ