- Advertisement -
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டிய கன மழை
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கன மழை கொட்டியது.

சென்னையில் சாந்தோம், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் மழைநீர் தேங்கியது.

அதேபோல் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை நீடித்தது.
பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பழவேற்காடு, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மழை பெய்தது.
மழை காரணமாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் வீசிய வெப்ப அலைக்காற்று முற்றிலும் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.


