Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை- சென்னை வரும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

கனமழை- சென்னை வரும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

-

- Advertisement -

 

கனமழை- சென்னை வரும் விமானங்கள்  திருப்பிவிடப்பட்டன!
Photo: Chennai International Airport

கனமழை காரணமாக, சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஜூன் 19) அதிகாலை 02.00 மணி முதல் காலை 06.00 மணி வரை துபாய், தோகா, அபுதாபி, லண்டன், ஷார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட் ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதேபோல், கனமழை காரணமாக, சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

கார்த்தி- ராஜுமுருகன் கூட்டணியின் ‘ஜப்பான்’… பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு!

கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், +2 துணைத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 1,146 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,646 மில்லியன் கனஅடி ஏரியின் மொத்த கொள்ளளவில் தற்போது நீர் இருப்பு 2,403 கனஅடியாக உள்ளது. கனமழை காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கத்திபாரா பாலத்தின் சுரங்கப் பாதை மூடப்பட்டுள்ளது.

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் எஸ் வி சேகர்!

சென்னையில் கனமழை, பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் சாலையில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

MUST READ