மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயிலை இடித்து அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமமின்றி அகற்ற வேண்டும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு அளித்திருந்தது.
சாலைகள் விரிவுபடுத்தும் போது நுழைவாயில்களை அப்புறப்படுத்துவது பற்றி மதுரை காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்ததை அடுத்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவாயிலை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
டெல்டா பகுதி அதன் முதல் மினி டைடல் பூங்காவைப் பெறுகிறது
நுழைவு வாயில்களை அகற்ற எந்த ஆய்வும் தேவை இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை பி.பி. குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.