Homeசெய்திகள்தமிழ்நாடுகல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க உயர்மட்ட குழு

கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க உயர்மட்ட குழு

-

கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கு தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்காக புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவைகள் சிறுபான்மை நலத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை இன நலத்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதில் கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளரின் தலைமையில் 9 பேர் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அரசு வகுத்திருக்கும் நிபந்தணைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருக்கிறது. விண்ணப்பங்களை ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்ட குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மாநில அரசன் விதிகள், நடைமுறைகள் மற்றும் கொள்கையின் அடிப்படையில் வழிகாட்டுதல்களை உருவாக்கவும், புதுப்பிக்கவும் இந்த குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

MUST READ