Homeசெய்திகள்தமிழ்நாடுஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

-

 

"மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Video Crop Image

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மகளிர் தினத்தில் பெண்களுக்கு பரிசு கொடுத்த மத்திய அரசு..!!

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மார்ச் 17, 31 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், மார்ச் 18, ஏப்ரல் 01 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வைத்த நபரின் முகம் இதுதான்- என்.ஐ.ஏ உறுதி..!!

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (மார்ச் 08) தொடங்கியுள்ளது. இந்த சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், கோட்டயம், செங்கனூர், திருவனந்தபுரம் சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ