spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு தனி அதிகாரி....ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு தனி அதிகாரி….ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!

அதன்படி, செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், மகளிர் உரிமைத்தொகைத் திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் இ.ஆ.ப., கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளராக கார்த்திகேயன் இ.ஆ.ப., உயர்கல்வித்துறைச் செயலாளராக கார்த்திக், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளம் கூடுதல் தலைமைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக விஷு மகாஜன் இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் செயலாளராக ரீத்தா ஹரீஸ் இ.ஆ.ப. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் இ.ஆ.ப., வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக அண்ணாதுரை இ.ஆ.ப., நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் பிரபாகர் இ.ஆ.ப., தமிழக சாலைப்பணித் திட்ட இயக்குநராக பிரபாகர் இ.ஆ.ப., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“ஆளுநருக்கான மரியாதையை தமிழக அரசு வழங்கி வருகிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்!

சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநரான பிரபாகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ