Homeசெய்திகள்தமிழ்நாடுஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!

-

 

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!
File Photo

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக, முன்னாள் காவல்துறை அதிகாரி ஹேமந்தரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ். (IFS) நிதி நிறுவனம், மக்களிடம் ஆசை வார்த்தைக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாயை வசூலித்திருந்தது. இந்த நிலையில், மக்களிடம் வசூலித்த பணத்துடன் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் தலைமறைவாகினர். இது குறித்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஐ.எஃப்.எஸ். நிறுவனத்திற்காக சுமார் 2,000 பேரிடம் ரூபாய் 550 கோடி வசூல் செய்ததாக, முன்னால் காவல்துறை அதிகாரியான ஹேமந்தரகுமாரை பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் நேற்று (ஜூன் 14) அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, அவரது சொத்து ஆவணங்களையும் பறிமுதல் காவல்துறையினர், வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றன.

“அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களின் கடன் அடைக்கப்பட்டது எப்படி?”- அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தகவல்!

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இதுவரை 8 பேரை கைது செய்துள்ள நிலையில், வெளிநாட்டுக்கு தப்பியோடிய இயக்குநர்களைப் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸை அனுப்பி உள்ளனர்.

MUST READ