spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

-

- Advertisement -

 

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
File Photo

பல பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி வீடியோ பதிவு செய்து துன்புறுத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த காசிக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

we-r-hiring

“தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்”- தமிழக அரசு அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த காசி மீது கடந்த 2020- ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இது குறித்து காசி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், பல இளம்பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து பணம் பறிக்கும் செயலில் காசி ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, காசி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

“செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

இந்த நிலையில், பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கின் இறுதி விசாரணை நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ