spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
Photo: ANI

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை நாடு முழுவதும் பயன்படுத்தி வருகிறது பா.ஜ.க. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் புலனாய்வு அமைப்புகள் மூலம் பழிவாங்குகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவிருப்பதால் பதற்றத்தில் பா.ஜ.க. இவ்வாறு செய்கிறது. விசாரணை அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. முடக்க நினைக்கிறது.

we-r-hiring

“செந்தில் பாலாஜி மீது நடவடிக்கைக் கோரியவர் மு.க.ஸ்டாலின்”- அண்ணாமலை பேட்டி!

பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. ஈடுபடுவதாக 14 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன. செந்தில் பாலாஜி பற்றி பேச தனக்கு அருகதை இருக்கிறதா என்பதை இபிஎஸ் யோசிக்க வேண்டும். இந்த வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மீது ஊழல், கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!

வேலுமணி, தங்கமணி மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செந்தில் பாலாஜி பற்றி பேசும் முன் எடப்பாடி பழனிசாமி கண்ணாடியைப் பார்க்க வேண்டும். டெண்டர் முறைகேடு, எல்இடி விளக்குகள் முறைகேடு என எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினர் ஊழல் செய்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

MUST READ